தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பணியிடங்களுக்கான விண்ணப்பம் புதுச்சேரி பல்கலை., திடீர் ரத்து

 அரசு பணியிடங்களுக்கான விண்ணப்பம் புதுச்சேரி பல்கலை., திடீர் ரத்து

 அரசு பணியிடங்களுக்கான விண்ணப்பம் புதுச்சேரி பல்கலை., திடீர் ரத்து


ADDED : மார் 09, 2026 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 03:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பல்வேறு அரசு பணியிடங்களுக்கான விண்ணப்ப அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் திடீரென அறிவித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

புதுச்சேரி பல்கலைக்கழகம் கடந்த 21.09.2022 மற்றும் 27.09.2023 ஆகிய தேதி அறிவிப்பு மூலம் பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. நிர்வாகக் காரணங்களால், அந்த அறிவிப்பில் கோரப்பட்ட அனைத்து பணியிடங்களுக்கான விண்ணப்பங்களும் தற்போது ரத்து செய்யப்படுகின்றன.

இருப்பினும், ஏற்கனவே இறுதிக்கட்டத்தை எட்டிய அல்லது பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்களுக்கு இது பொருந்தாது. அதாவது, 21.09.2022 தேதியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட இயக்குநர், சட்ட அலுவலர், இந்தி அலுவலர், இளநிலை உதவியாளர், தனி உதவியாளர், இயற்பியல் ஆய்வக உதவியாளர், இந்தி மொழிபெயர்ப்பாளர்; செமிதொழில்முறை உதவியாளர், நெட்ஒர்க்கிங், கம்ப்யூட்டர் முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், செவிலியர் பணிக்கு பொருந்தாது.

இதேபோல் 27.09.2023 தேதியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட இளநிலை உதவியாளர் மற்றும் பல்பணி பணியாளர்கள் பணிக்கும் பொருந்தாது.

விண்ணப்பதாரர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்கள், தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களுடன் வங்கியின் பெயர், கிளை, கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி., குறியீடு, கட்டணத்தைத் திரும்பப் பெறக்கோரி, இந்த அறிவிப்பு வெளியான ஒரு மாத காலத்திற்குள், உதவிப் பதிவாளர், பணியாளர் தேர்வு பிரிவு, புதுச்சேரி பல்கலைக்கழகம் recruitment@pondiuni.ac.in என்ற இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us