தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பல்கலை., யூ.ஜி., கியூட் தேர்வு : 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

 புதுச்சேரி பல்கலை., யூ.ஜி., கியூட் தேர்வு : 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

 புதுச்சேரி பல்கலை., யூ.ஜி., கியூட் தேர்வு : 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜன 16, 2026 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 06:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் யூ.ஜி., படிப்புகளுக்கு வரும் 30ம் தேதி வரை தேசிய தேர்வு முகமை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை கடந்த 2022ம் ஆண்டு முதல் புதுச்சேரி பல்கலைக்கழக படிப்புகளுக்கு கியூட் தேர்வு அடிப்படையில் சேர்க்கையை நடத்தி வருகிறது.

இந்தாண்டும் பொது நுழைவுத் தேர்வு கியூட் (யூ.ஜி) - 2026 அடிப்படையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பல்வேறு யூ.ஜி., படிப்புகளுக்கு சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தேசிய தேர்வு முகமை இணையதளம் கடந்த 3ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி பல்கலைக்கழக செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2026--27ம் கல்வியாண்டிற்கான முதுநிலை பட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கியூட் (யூ.ஜி) நுழைவு தேர்வுக்கு https://cuet.nta.nic.in/ என்னும் இணைய முகவரியில் வரும் 30ம் தேதி இரவு 11:30 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வரும் 31ம் தேதி இறுதி நாளாகும்.

விண்ணப்பங்களில் திருத்தங்களுக்கு பிப்ரவரி 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுழைவு தேர்வுகள் மே 11 ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்வு மைய விபரங்கள் பிறகு தெரிவிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது பிரிவினர் 3 படிப்புகளுக்கான நுழைவு தேர்வு எழுத 1,000 ரூபாய், ஒவ்வொரு கூடுதல் படிப்புகளுக்கு 400 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஓ.பி.சி., இ.டபுள்யூ.எஸ்., பிரிவினர் முதல் 3 படிப்புகளுக்கான நுழைவு தேர்விற்கு 900 ரூபாய், ஒவ்வொரு கூடுதல் படிப்பு நுழைவு தேர்விற்கு 375 ரூபாய், எஸ்.சி., - எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினர், மூன்றாம் பாலினத்தவர்கள் முதல் மூன்று படிப்புகளுக்கு 800 ரூபாய், ஒவ்வொரு கூடுதல் படிப்பிற்கும் 350 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

ரிசல்ட் வந்த பிறகு புதுச்சேரி பல்கலைக்கழக இணையதளத்தில் குறிப்பிடப்படும் நாட்களில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். கியூட் அப்டேட் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு முகமையில் வலைத்தளத்தை தவறாமல் பார்க்கவும்

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us