புதுச்சேரி வாசவி கிண்டர் நெஸ்ட் மழலைகள் பள்ளி முதல்வர் திறப்பு
புதுச்சேரி வாசவி கிண்டர் நெஸ்ட் மழலைகள் பள்ளி முதல்வர் திறப்பு
UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 09:38 PM

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்ரீ வாசவி கிண்டர் நெஸ்ட் மழலைகள் பள்ளியினை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
புதுச்சேரி, நீடராஜப்பர் வீதியில் ஸ்ரீ வாசவி கிண்டர் நெஸ்ட் மழலைகள் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பள்ளியைத் திறந்து வைத்து வாழ்த்தினார். விழாவில், நேரு எம்.எல்.ஏ., பி.டி.ஐ தாளாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மழலையர் பள்ளியின் துவக்க விழாவில் வாசவி கிளப் இன்டர்நேஷனலின் பன்னாட்டு தலைவர் சித்த வெங்கட சூரிய பிரகாச ராவ், வாசவி கிளப் இன்டர்நேஷனலின் மாவட்ட ஆளுநர் சமுத்திர ராஜகுமார், புதுச்சேரி வாசவி கிளப் தலைவர் ராதாகிருஷ்ணன், மகிளா சங்கத் தலைவி சத்யா ரமேஷ்பாபு, இளைஞர் அணி தலைவர் நரசிம்மன் மற்றும் மாவட்ட பேரவையினர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
குழந்தைகளின் பாதுகாப்பான மற்றும் அன்பான கற்றல் சூழலை மையமாகக் கொண்டு இப்பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை பள்ளியின் நிறுவனர்கள் மற்றும் இயக்குநர்கர் சந்திரகலா சீனிவாசன், சித்ரா ரமேஷ், ப்ரீத்தி ராதாகிருஷ்ணன், சவுந்தர்யா பிரவீன்குமார், உஷாராணி வெங்டேசன் ஆகியோர் செய்திருந்தனர்.
சீனிவாசன் நன்றி கூறினார்.
