தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குத்து சண்டை போட்டி: புதுச்சேரிக்கு வெண்கலம்

குத்து சண்டை போட்டி: புதுச்சேரிக்கு வெண்கலம்

குத்து சண்டை போட்டி: புதுச்சேரிக்கு வெண்கலம்


UPDATED : ஜூலை 08, 2026 08:19 PM

ADDED : ஜூலை 08, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2026 08:19 PM ADDED : ஜூலை 08, 2026 08:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பஞ்சாப்பில் நடந்த குத்து சண்டை போட்டியில், புதுச்சேரி மாணவர் வெண்கலப்பதக்கம் வென்றார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் லவ்லி புரோஷனல் பல்கலைகழகம் சார்பில், தேசிய அளவிலான குத்துச் சண்டை போட்டிகள் கடந்த மாதம், 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந்தது. இருபாலருக்கும் நடந்த போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த குத்துசண்டை வீரர் கிரண்குமார் 52 கிலோ பிரிவில் சப்-ஜூனியர் போட்டிகளில் கலந்து கொண்டார். பஞ்சாப், மகாராஷ்டிரா, ஹரியானா அணிகளை வீழ்த்தி அரையிறுக்கு முன்னேறினார், பின் ஆந்திராவுடன் நடந்த அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதனையடுத்து, அவர் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து வாழ்த்து பெற்றார். நிகழ்ச்சியில், பாண்டிச்சேரி அமெச்சூர் குத்து சண்டை கழக தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., சிவசங்கர், பொது செயலாளர் கோபு, துணைத் தலைவர் கேசவலு ,பயிற்சியாளர் வசந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us