புதுச்சேரி மகளிர் பொறியியல் கல்லுாரி இனோவேஷன் போட்டியில் சாதனை
புதுச்சேரி மகளிர் பொறியியல் கல்லுாரி இனோவேஷன் போட்டியில் சாதனை
ADDED : மே 04, 2026 04:31 AM

புதுச்சேரி: புதுச்சேரி இனோவேஷன் 2026 போட்டியில், புதுச்சேரி மகளிர் பொறியியல் கல்லுாரி மாணவிகள் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசுடன் முதல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளனர்.
புதுச்சேரி அரசின் கல்வி அமைச்சகம் நடத்திய புதுச்சேரி இனோவேஷன் - 2026 நிகழ்ச்சி, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்தது. 264 அணிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
இதில் 15 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட அணிகள் 'புதுச்சேரி இனோவேஷன்- 2026' இறுதி போட்டியில் பங்கேற்றன.
இதில் புதுச்சேரி மகளிர் பொறியியல் கல்லுாரி மாணவிகள் முதல் பரிசு பெற்று ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசுடன் சாதனை படைத்தனர்.
வெற்றிக்கு பங்களித்த டாக்டர் காந்திமோகன், விரிவுரையாளர் வழங்கிய முன்மாதிரியான வழிகாட்டுதல், ஆலோசனைகளுக்கு கல்லுாரி சார்பில், பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் முத்து மீனா, மாணவிகளின் சிறந்த செயல்திறனை பாராட்டினார்.
நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் தணிகாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
