தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி வீர மகளுக்கு 'சவுர்ய சக்ரா' விருது

 புதுச்சேரி வீர மகளுக்கு 'சவுர்ய சக்ரா' விருது

 புதுச்சேரி வீர மகளுக்கு 'சவுர்ய சக்ரா' விருது


ADDED : ஜன 29, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 06:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த வீர மகளுக்கு, நாட்டின் உயரிய விருதான 'சவுர்ய சக்ரா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மூன்றாவது மிக உயரிய வீரதீர செயல் விருது சவுர்ய சக்ரா ஆகும்.

இது, எதிரியுடன் நேரடி போரில் ஈடுபடாத ஆனால், அசாதாரண தைரியம் மற்றும் தன்னலமற்ற தியாகம் புரிந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

அண்மையில் நடந்த குடியரசு தின விழாவில், இந்த சவுர்ய சக்ரா விருது, இந்திய கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் ரூபா, 31, என்பவருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த விருதை பெற்ற ரூபா, புதுச்சேரி மாநிலம், தவளக்குப்பம் வி.ஐ.பி., நகரில் வசிக்கிறார். தந்தை அழகிரி, 70; ஓய்வு பெற்ற விமானப்படை டெக்னீஷியன்.

இவரது பூர்வீகம் தமிழ்நாடு, கடலுார் மாவட்டம், வன்னியர்பாளையம். சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லுாரியில் விமானவியல் பொறியியல் பட்டம் பெற்றார். பின், இந்திய கப்பற்படையில் இணைந்து, கோவாவில் லெப்டினன்ட் கமாண்டராக தேச சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது, நவிகா சாகர் பரிக்ரமா - 2 எனும் உலக சுற்று பயணத்தின்போது, கடுமையான அபாயகரமான சூழ்நிலைகளில், அவர் காட்டிய துணிச்சல் தொழில்முறை செயல்திறனை அங்கீகரித்து, சவுர்ய சக்ரா விருது ரூபாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us