புதுவை உளவுத்துறை போலீசார் ஆயுதப்படைக்கு துாக்கியடிப்பு
புதுவை உளவுத்துறை போலீசார் ஆயுதப்படைக்கு துாக்கியடிப்பு
ADDED : செப் 05, 2026 03:25 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில முக்கிய சம்பவங்கள் மற்றும் உள்கட்சி, அரசியல் நகர்வுகள் குறித்த உளவுத்துறை தகவல்கள் உயரதிகாரிகளுக்கும், அரசுக்கும் உடனே சென்று சேரவில்லை.
உளவுத்துறையில் பணியாற்றிய சிலர், தங்கள் பணியில் சுணக்கம் காட்டியதாகவும், கள நிலவரத்தை சரியாக கணித்து அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்றும் மூத்த அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, உடனடியாக செயல்பட்ட காவல் துறை தலைமை, உளவுத்துறையில் நீண்ட நாட்களாக பணியாற்றி வந்த, எட்டு பேரை கூண்டோடு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது.
இவர்கள் அனைவரும் ஆயுதப்படைக்கு துாக்கி அடிக்கப்பட்டுள்ளனர்.பழைய அதிகாரிகளை மாற்றிய கையோடு, உளவுத்துறையின் செயல்பாடுகளை துரிதப்படுத்த புதிய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கும், மாநிலத்தின் எந்தவொரு சிறிய சலசலப்பும் அரசுக்கு தெரியாமல் போகக்கூடாது என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
