/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஞ்சாப் விழாவில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு
/
பஞ்சாப் விழாவில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு
ADDED : அக் 27, 2025 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பஞ்சாப்பில், குரு தேக் பகதுார் நினைவு நாள் விழாவில், பங்கேற்க, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அமைச்சர்கள் அழைப்பிதழை கொடுத்தனர்.
புதுச்சேரிக்கு வந்த பஞ்சாப் மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ஹர்பஜன் சிங், நீர் ஆதாரங்கள் மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் பரிந்தர் குமார் கோயல் ஆகியோர் சட்டசபையில், முதல்வர் ரங்கசாமியை, சந்தித்து பேசினர்.
அப்போது பஞ்சாபில் வரும் நவம்பர் 25ம் தேதி, நடைபெற உள்ள, குரு தேக் பகதூர் 350வது நினைவு நாள் விழாவில், பங்கேற்குமாறு, முதல்வரிடம், அழைப்பிதழை, வழங்கினர்.

