/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொம்மலாட்டக்கலை ஈச் உலக சாதனை நிகழ்ச்சி
/
பொம்மலாட்டக்கலை ஈச் உலக சாதனை நிகழ்ச்சி
ADDED : மார் 24, 2025 04:29 AM

புதுச்சேரி: புதுச்சேரி தன்னம்பிக்கை பொம்மலாட்ட கலைக்குழு சார்பில் உலக பொம்மலாட்ட தினத்தை முன்னிட்டு எலிசபெத் ராணியின் 76 நிமிட தொடர் பொம்மலாட்டக்கலை ஈச் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது.
ஈச் உலக சாதனை நிறுவன சேர்மன் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். முதன்மை ஒருங்கிணைப்பாளர் பூபேஷ்குப்தா வரவேற்றார். தொடர் பொம்மலாட்டக் கலை ஈச் உலக சாதனை நிகழ்ச்சியை ஹீமோபிலியா சங்கத் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் நளினி, தமிழ்ச்சங்கத் தலைவர் முத்து, கலை பண்பாட்டுத்துறை முன்னாள் இயக்குனர் கலியபெருமாள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கலைமாமணி ராஜா, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் லட்சுமிபதி, இந்திராகாந்தி தேசிய கலை மைய முன்னாள் மண்டல இயக்குனர் கோபால் ஜெயராமன், அரசு மருத்துவ செவிலியர் கல்லுாரி முதல்வர் பிரமிளா தமிழ்வாணன், தலைமை செவிலியர் பங்காரு அம்மாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்றத் தலைவர் சிவக்குமார், டாக்டர் வித்யா ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், தொடர்ந்து 76 நிமிடங்கள் பொம்மலாட்டக்கலையை நிகழ்த்திய கலைரத்னா எலிசபெத் ராணிக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை தன்னம்பிக்கை பொம்மலாட்ட கலைக்குழு நந்தகோபால், பிரசாந்த் ஆகியோர் செய்திருந்தனர்.