/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புரட்டாசி 3ம் சனி சிறப்பு வழிபாடு
/
புரட்டாசி 3ம் சனி சிறப்பு வழிபாடு
ADDED : அக் 06, 2024 04:28 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள பெருமாள் கோவில்களில், புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையொட்டி, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
புதுச்சேரி,முத்தியால்பேட்டை சீனிவாசப்பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.
இதையொட்டி, காலை 7:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, மாலை 6:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில், மஹா தீபாராதனை மற்றும் நெய் வேத்தியம் நடந்தது.
திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதேபோல்,காந்தி வீதி பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜப்பெருமாள் கோவில், செட்டிப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையொட்டி, சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.