/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லட்சுமி நரசிம்மர் கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு
/
லட்சுமி நரசிம்மர் கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு
ADDED : செப் 22, 2024 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தவளக்குப்பம் அடுத்த சிங்கிரிகுடி பகுதியில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த பெருமாள் கோவில், பரிகார ஸ்தலமாக இருந்து வருவதால், தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையொட்டி, லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெரு மாளை தரிசனம் செய்தனர்.