/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுத்திரிக்கப்பட்ட குடிநீர் பொதுப்பணித் துறை ஏற்பாடு
/
சுத்திரிக்கப்பட்ட குடிநீர் பொதுப்பணித் துறை ஏற்பாடு
சுத்திரிக்கப்பட்ட குடிநீர் பொதுப்பணித் துறை ஏற்பாடு
சுத்திரிக்கப்பட்ட குடிநீர் பொதுப்பணித் துறை ஏற்பாடு
ADDED : ஏப் 15, 2025 04:34 AM

புதுச்சேரி: பொதுப்பணித் துறை பொதுமக்களின் தாகம் தணிக்க சட்டசபை, ஓட்டல் அதீதி அருகே இரண்டு இடங்களில் குடிநீர் பந்தலை வைத்துள்ளது.
புதுச்சேரியில் வெயிலின் சமாளிக்க பொதுமக்கள் இளநீர், நுங்கு, தர்பூசணி, பழச்சாறு கடைகளில் தஞ்சம் புகுந்து குளிர்ச்சிப்படுத்தி கொள்கின்றனர். பொதுமக்களின் தாகம் தணிக்க அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் பல்வேறு இடங்களில் குடிநீர் குடங்களை வைத்துள்ளன.
அந்த வரிசையில் இப்போது பொதுப்பணித் துறையும் பொதுமக்களின் தாகம் தணிக்க சட்டசபை, ஓட்டல் அதீதி அருகே இரண்டு இடங்களில் குடிநீர் பந்தலை வைத்துள்ளது. அதில் பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களை வழங்கி வருகிறது.
தாகம் தணிக்கும் பொதுமக்களுக்கு பொதுப்பணித் துறையின் முயற்சியை மனம் திறந்து பாராட்டிவிட்டு செல்லுகின்றனர்.
பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. சாலைகளில் செல்ல முடியாத அளவிற்கு அனல் வீசுகிறது.
இதனால், பொதுப்பணித் துறை அமைச்சரின் உத்தரவின்பேரில் சிக்னல்களில் நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்டமாக அவரின் உத்தரவின்படி, சட்டசபை உள்ளிட்ட இரண்டு இடங்களில் பொதுமக்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகித்து வருகின்றோம்.
இதேபோல், பல்வேறு இடங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றது என்றனர்.