/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெட்டப்பாக்கம் கோவிலில் கியூ.ஆர்., கோடு உண்டியல்
/
நெட்டப்பாக்கம் கோவிலில் கியூ.ஆர்., கோடு உண்டியல்
ADDED : செப் 05, 2025 02:59 AM

நெட்டப்பாக்கம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, புதுச்சேரி மண்டலம் மற்றும் நெட்டப்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை சார்பில், நெட்டப்பாக்கம் பர்வத வர்த்தின சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் கியூ.ஆர்., கோடு மூலம் காணிக்கை செலுத்தும் வகையில் உண்டியல் அமைக்கப்பட்டு, அதற்கான திறப்பு விழா நடந்தது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புதுச்சேரி மண்டல மேலாளர் ரவிசங்கர் சாகூ தலைமை தாங்கினார். நெட்டப்பாக்கம் ஐ.ஓ.பி., வங்கி கிளை மேலாளர் விஜய் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு கியூ.ஆர்., கோடு உண்டியலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள், கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.