தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரோமன் ரோலண்ட் நுாலகத்தில் கியூ.ஆர்., கோடு கட்டண வசதி

ரோமன் ரோலண்ட் நுாலகத்தில் கியூ.ஆர்., கோடு கட்டண வசதி

ரோமன் ரோலண்ட் நுாலகத்தில் கியூ.ஆர்., கோடு கட்டண வசதி


UPDATED : அக் 29, 2026 10:45 PM

ADDED : அக் 29, 2026 10:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 10:45 PM ADDED : அக் 29, 2026 10:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் அரசு அருங்காட்சியகம் மற்றும் ரோமன் ரோலண்ட் நுாலகத்தில் கியூ.ஆர்., குறியீடு மற்றும் விற்பனை முனை (பி.ஓ.எஸ்) இயந்திரங்கள் மூலம் கட்டணம் செலுத்தும் புதிய டிஜிட்டல் வசதி துவக்க நிகழ்ச்சி நடந்தது.

விழாவில், அமைச்சர் ராஜவேலு தலைமை தாங்கி, இயந்திரங்கள் மூலம் கட்டணம் செலுத்தும் வசதிகளை துவக்கி வைத்தார். கலை மற்றும் பண்பாட்டுத் துறை செயலர் மற்றும் இயக்குநர் சக்திவேல் உள்ளிட்ட ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

மத்திய அரசு நாடு முழுதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை அனைத்து அரசு துறைகளிலும் படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் அரசு அருங்காட்சியகம் மற்றும் ரோமன் ரோலண்ட் நுாலகத்தில் கியூ.ஆர்., குறியீடு மற்றும் பி.ஓ.எஸ்., இயந்திரங்கள் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்பட்டுள்ளது.

இந்த வசதியின் மூலம் அரசு அருங்காட்சியகம் மற்றும் ரோமன் ரோலண்ட் நுாலகத்திற்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் நுாலக பயனாளர்கள் நுழைவு கட்டணம் மற்றும் இதர அனுமதிக்கப்பட்ட கட்டணங்களை டிஜிட்டல் இயந்திரங்கள் வாயிலாக எளிதாகவும், பாதுகாப்பாகவும் செலுத்த முடியும்.

ரொக்கப் பணப் பயன்பாட்டை குறைப்பதற்கும், பொதுமக்களுக்கு நவீன டிஜிட்டல் கட்டண வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கியூ.ஆர். கோடு மற்றும் பி.ஓ.எஸ்., இயந்திரங்கம் மூலம் வசூலிக்கப்படும் இதர கட்டணங்கள் தனி வங்கி கணக்கில் ஒருங்கிணைக்கப்பட்டு, பின் கணக்குகள் மற்றும் கருவூல இயக்ககத்தின் அறிவுறுத்தலின்படி உரிய அரசுக் கணக்கில் செலுத்தப்படும்.

இந்த வசதியினை பொதுமக்கள், நுாலக பயனாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us