/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெத்திசெமினார் பள்ளியில் வினாடி, வினா போட்டி
/
பெத்திசெமினார் பள்ளியில் வினாடி, வினா போட்டி
ADDED : அக் 27, 2025 11:41 PM

புதுச்சேரி: பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த வினாடி, வினா போட்டியில், வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி, க்விஸ் கிளப் மற்றும் டைனி ட்ராப்ஸ் இணைந்து, காந்தி வீதி பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளியில், வினாடி, வினா போட்டி நடந்தது.
போட்டியில், 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி முதல்வர் தேவதாஸ் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில், டைனி ட்ராப்ஸ் அமைப்பின் தலைவர் முத்துகுமரன், ஆசிரியர்கள் பீட்டர் ஜார்ஜ், ஜான் பிரிட்டோ, பள்ளியின் முன்னாள் மாணவர்களும், டாக்டர், கவுதம், பாரதி உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

