/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேபிஸ் இல்லாத புதுச்சேரி : ஆலோசனை கூட்டம்
/
ரேபிஸ் இல்லாத புதுச்சேரி : ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 05, 2025 02:55 AM

புதுச்சேரி: ராஜிவ் காந்தி கால்நடை கல்வி மற்றும் ஆராய்ச்சிநிறுவனத்தில் ரேபிஸ் இல்லாத புதுச்சேரி குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
டாக்டர் முருகவேல் தலைமை தாங்கி, ஒருங்கிணைந்த சுகாதார அணுகுமுறை என்ற கலைப்பில் பேசினார்.
ராஜிவ் காந்தி கால்நடை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர்கள் பானுரேகா, அஜய்குமார், விஜயலட்சுமி, காந்தராஜ், நித்யா கேந்துவால், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை டாக்டர்கள் குமரன், ராஜிவ் ரவுனியாத், அனந்தராமன், மரியா, நலவழித்துறை டாக்டர் முரளிதரன், இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர்கள் கவிதா வாசுதேவன், சுரேந்திரன், மகரத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன டாக்டர் சீதாராமன், புதுச்சேரி நகராட்சி கால்நடை மருத்துவ அலுவலர் ஆர்த்தி, பார்க் இந்தியா சாரிட்டபிள் டிரஸ்ட் சோலைராஜன், டாக்டர் ரவிவர்மன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
கூட்டத்தில் ரேபிஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ரேபிஸ் இல்லா புதுச்சேரியை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.