/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு கல்லுாரியில் 'ரேபிஸ்' கருத்தரங்கு
/
அரசு கல்லுாரியில் 'ரேபிஸ்' கருத்தரங்கு
ADDED : செப் 27, 2025 02:40 AM

அரியாங்குப்பம் : புதுச்சேரி பிராணிகள் நலன் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தவளக்குப்பம் ராஜிவ் காந்தி அரசு கல்லுாரி இணைந்து, ரேபிஸ் நோயை ஒழிப்பது குறித்த கருத்தரங்கை நடத்தின.
ரேபிஸ் நோய் தினத்தை யொட்டி, கல்லுாரியில் கருத்தரங்கு நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் அண்ணா மோனிஷா தலைமை தாங்கினார்.
கால்நடை மருத்துவர் செல்வமுத்து, மாணவர்களுக்கான ரேபிஸ் விழிப்புணர்வு கையெட்டை வழங்கினார்.
சபாநாயகர் செல்வம், ஒவியம் மற்றும் பேச்சு போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி, பேசினார். சிறப்பு விருந்தினராக கால்நடைத்துறை இணை இயக்குனர் குமாரவேல், ரேபிஸ் நோய் எவ்வாறு வருகிறது. அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். நாட்டு நலப் பணித்திட்ட அதிகாரிகள் ஜீவலட்சுமி, செந்தமிழன் கோ, ரேவதி உட்பட பலர் பங்கேற்றனர்.