ADDED : செப் 22, 2025 02:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில், சேவா பக்வாடா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாம், மறைமலை அடிகள் சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் நடந்தது.
முகாமில் 50க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி போடப்பட்டது. தெரு நாய்களை எப்படி கையாள்வது, தெரு நாய் கடிக்க நேரிட்டால் முதலுதவி செய்வது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. முகாமில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரி பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
ஏற்பாடுகளை புதுச்சேரி அரசு கால்நடை மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.