ADDED : ஜன 20, 2025 06:29 AM

புதுச்சேரி: புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், ராதா மாதவ திருக்கல்யாணம் மகோற்சவம் நேற்று நடந்தது.
புதுச்சேரி தர்ம சம்ரக் ஷ்ண சமிதி சார்பில், 6ம் ஆண்டு ராதா மாதவ திருக்கல்யாண மகோற்சவம், லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் துவங்கியது.
அன்று காலை 8:30 மணிக்கு கணபதி பூஜை, தோடய மங்களம், குரு கீர்த்தனை, அஷ்டபதி பஜனை, மதியம் 2:00 மணிக்கு அஷ்டபதி பஜனை, பஞ்சபதி உபசார கீர்த்தனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு கலைமாமணி கல்யாணராமன் பாகவதர் தலைமையில், திவ்யநாம சங்கீர்த்தன பஜனை நடந்தது.
நேற்று காலை 7:30 மணிக்கு உஞ்சவ்ருத்தி, காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி வரை ராதா மாதவ திருக்கல்யாண மகோற்சவம் நடந்தது.
காலை 11:30 மணிக்கு மாங்கல்ய தாரணம் நடந்தது. தொடர்ந்து ராதா மாதவ திருக்கல்யாணம் மகோற்சவத்தையொட்டி, உடையாளூர் கலைமாமணி பஜன் சாம்ராட் கல்யாணராமன் பாகவதர் தலைமையில், ஆஞ்சநேய உற்சவ பஜனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.