sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராதா மாதவ திருக்கல்யாண மகோற்சவம் துவக்கம்

ராதா மாதவ திருக்கல்யாண மகோற்சவம் துவக்கம்

ராதா மாதவ திருக்கல்யாண மகோற்சவம் துவக்கம்


ADDED : ஜன 12, 2025 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2025 04:42 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி புதுச்சேரியில் ராதா மாதவ திருக்கல்யாண மகோற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி, சித்தன்குடி, ஜெயராம் கல்யாண மண்டபத்தில், வேதபாரதி சார்பில், ராதா மாதவ திருக்கல்யாண மகோற்வசம் நேற்று துவங்கியது. விழாவில் பெண், மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வேத பாராயணம் நடந்தது.

காலை 10:30 மணிக்கு நாம சங்கீர்த்தனம், மாலை 4:30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம், மகா மந்தர அகண்ட பாராயணம் நடந்தது.

தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு அஷ்டபதி, தரங்கம், பஞ்சபதி, கணேசாதி தியானம், பூஜை, திவ்ய நாமம் நடைபெற்றது.

இன்று 12,ம் தேதி காலை 6:00 மணி முதல் மார்கழி மாத பஜனை, உஞ்சவ்ருத்தி, திவ்ய நாமம், அஷ்டபதி, ராதா மாதா திருக்கல்யாணம், ஆஞ்சநேயர் உற்சவம், மங்கள ஆரத்தி நடக்கிறது.

விழாவில் கடையநல்லுார் ராஜகோபால்தாஸ் பாகவதர் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us