ADDED : ஜன 26, 2026 04:29 AM

புதுச்சேரி: புதுச்சேரி வேதபாரதி சார்பில், ராதாகல்யாணம் மகோத்தவம் மற்றும் ஆஞ்சநேய உத்சவம் இன்று (26ம் தேதி) நடக்கிறது.
பாரத பண்பாட்டு அமைப்பான புதுச்சேரி வேதபாரதி சார்பில், லாஸ்பேட்டை இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் பஜன்மேளா நடந்து வருகிறது. மூன்றாம் நாளான நேற்று காலை, புதுச்சேரி யுவ வேதபாரதி குழுவினரின் மகாமந்திரம், கோவை கவுதம் கண்ணன் பாகவதர் மற்றும் விட்டல் சத்யநாராயணன் பாகவதர் குழுவினரின் அஷ்டபதி நாமசங்கீர்த்தனம், மாலை உடையாளூர் கல்யாணராமன் குழுவினரின் பூஜை, சம்ப்ரதாய திவ்ய நாம சங்கீர்த்தனம் நடந்தது.
இன்று (26ம் தேதி) காலை 7:00 மணிக்கு உஞ்சவ்ருத்தியும், 9:00 மணிக்கு கடையநல்லுார் ராஜகோபால் பாகவதர் குழுவினரின் ராதாகல்யாணம் மகோத்தவம் மற்றும் ஆஞ்சநேய உத்சவம் நடக்கிறது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேதபாரதி தலைவர் பட்டாபிராமன், பொதுச்செயலாளர் நடராஜன், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.
