sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 வேதபாரதி பஜன் மேளாவில் நாளை ராதா கல்யாணம்

/

 வேதபாரதி பஜன் மேளாவில் நாளை ராதா கல்யாணம்

 வேதபாரதி பஜன் மேளாவில் நாளை ராதா கல்யாணம்

 வேதபாரதி பஜன் மேளாவில் நாளை ராதா கல்யாணம்


ADDED : ஜன 25, 2026 04:35 AM

Google News

ADDED : ஜன 25, 2026 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: : -: புதுச்சேரி வேதபாரதி சார்பில், நாளை ராதா கல்யாணம் மகோத்சவம் நடக்கிறது.

பாரத பண்பாட்டு அமைப்பான புதுச்சேரி வேதபாரதி சார்பில், லாஸ்பேட்டை இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினத்தில் இருந்து பஜன்மேளா நடைபெற்று வருகிறது.

அதில் இரண்டாம் நாளான நேற்று காலை சங்கர வித்யாலயா மாணவர்களின் மகாமந்தரம், ஈரோடு மதுசூதன பாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம், மாலை குத்தாலம் ஜெயராம பக்த பஜன் மண்டலியினரின் நமாசங்கீர்த்தனம், ஆதித்யா ரமேஷ் பாகவதர் குழுவினரின் தியானம் மற்றும் அபங்க திவ்ய நமாசங்கீர்த்தனம் நட ந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மூன்றாம் நாளான இன்று காலை 8:30 மணிக்கு புதுவை யுவ வேதபாரதி குழுவினரின் மகாமந்திரம், 9 மணிக்கு கோவை கவுதம் கண்ணன் பாகவதர் மற்றும் விட்டல் சத்யநாராயணன் பாகவதர் குழுவினரின் அஷ்டபதி, நாமசங்கீர்த்தனம், மாலை 4:30 மணிக்கு உடையாளூர் கல்யாணராமன் குழுவினரின் பூஜை, சம்ப்ரதாய திவ்ய நாம சங்கீர்த்தனம் மற்றும் டோலோத்சவம் நடக்கிறது.

நாளை காலை 7:00 மணிக்கு உஞ்சவ்ருத்தியும், 9 மணிக்கு கடையநல்லுார் ராஜகோபால் பாகவதர் குழுவினரின் ராதாகல்யாணம் மகோத்தவம் மற்றும் ஆஞ்சநேய உத்சவம் நடக்கிறது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேதபாரதி தலைவர் பட்டாபிராமன், பொதுச் செயலாளர் நடராஜன், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us