தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராகுல் 6ம் தேதி புதுச்சேரி வருகை காங்., மாநில தலைவர் தகவல் 

 ராகுல் 6ம் தேதி புதுச்சேரி வருகை காங்., மாநில தலைவர் தகவல் 

 ராகுல் 6ம் தேதி புதுச்சேரி வருகை காங்., மாநில தலைவர் தகவல் 


ADDED : ஏப் 03, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து போன்று எந்த வாக்குறுதியை தே.ஜ., கூட்டணி அரசு நிறைவேற்றவில்லை என, காங்., குற்றம் சாட்டியுள்ளது.

காங்., தலைமை அலுவலகத்தில் காங்., பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் கூறியதாவது:

புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் தே.ஜ., கூட்டணி அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை. மாநில அந்தஸ்து கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு வரும் பிரதமரிடம் மக்கள் நிறைய கேள்விகளை கேட்க உள்ளனர்.

அதற்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும். கடந்த முறை தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது, பெஸ்ட் புதுச்சேரி ஆக்குவேன் என்றார். ஆனால் நிர்வாக ரீதியாக வொர்ஸ்ட் புதுச்சேரி ஆகிவிட்டது. இந்த ஊழல் அரசை 9ம் தேதி மக்கள் ஓட்டு அளித்து வீட்டிற்கு அனுப்புவர்' என்றார்.

காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் கூறுகையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு வரும் 4ம் தேதி காங்., தலைவர் மல்லிகார்ஜூனா கார்க்கேவும், 6ம் தேதி ராகுலும் புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகின்றனர்.

'இண்டி' கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. கட்சி கட்டுப்பாட்டை மீறி போட்டியிடும் 5 காங்., வேட்பாளர்கள் மீது தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும்.

தேர்தல் அறிக்கையை காங்., தலைவர் வெளியிடுவர்'என்றார்.

2 தொகுதிகளில் வி.சி.க., தேர்தல் பணிகள் நிறுத்தம் வி.சி.க., பொதுச்செயலாளர் ரவிக்குமார் கூறுகையில், 'இண்டி கூட்டணியில் வி.சி.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியில் கை சின்னத்தில் வேட்பாளர் நிறுத்தப்பட்டதால், உழவர்கரை, நெட்டப்பாக்கம், ஊசுடு ஆகிய தொகுதிகளில் கட்சி சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது அதிகாரப்பூர்வமாக உழவர்கரை வி.சி.க.,வுக்கு ஒதுக்கப்பட்டதால், கட்சி தலைவர் திருமாவளவனிடம், காங்., தலைவர் பேசியதால் உழவர்கரை தவிர்த்து மீதும் உள்ள தொகுதிகளில் வி.சி.க., வேட்பாளர்களிடம் தேர்தல் பணிகளை நிறுத்துமாறு கூறியுள்ளோம்.அவர்களை காங்., கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்ற அறிவுறுத்தியுள்ளோம்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us