ADDED : டிச 02, 2024 04:54 AM

புதுச்சேரி : புயல், கனமழை காரணமாக புதுச்சேரி, வெங்கடா நகர் துணை மின் நிலையத்தில் தண்ணீர் தேங்கியது.
இதையறிந்த கவர்னர் கைலாஷ்நாதன், துணைமின் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டார். பின், கனகன் ஏரியை பார்வையிட்ட அவர், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினார்.
அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா ஆறுமுகம், ராமலிங்கம் எம்.எல்.ஏ., மின்துறை தலைமை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, கிருஷ்ணா நகரில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் கவர்னர் பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆரியபாளையம் மேம்பாலம், சங்கராபரணி ஆறு, வில்லியனுார் துணை மின் நிலையங்களையும் பார்வையிட்டார்.
இ.சி.ஆர். லாசுப்பேட்டை மாநில அவசரகால உதவி மையத்தில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தினர். தலைமைச் செயலர் சரத் சவுகான், கலெக்டர் குலோத்துங்கன், கவர்னரின் செயலர் நெடுஞ்செழியன், டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் பங்கேற்றனர்.