/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் பகுதியில் மழை பாதிப்பு; வேளாண் அதிகாரிகள் ஆய்வு
/
பாகூர் பகுதியில் மழை பாதிப்பு; வேளாண் அதிகாரிகள் ஆய்வு
பாகூர் பகுதியில் மழை பாதிப்பு; வேளாண் அதிகாரிகள் ஆய்வு
பாகூர் பகுதியில் மழை பாதிப்பு; வேளாண் அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜன 09, 2024 07:10 AM
பாகூர் : பாகூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை, வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பாகூர் பகுதியில் கன மழை பெய்தது. இதனால், பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம், இருளஞ்சந்தை, சேலியமேடு உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், மணிலா, மரவள்ளி, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. குறிப்பாக, விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை பகுதியில் மழை சேத பாதிப்புகள் அதிகமாக உள்ளன.
இந்நிலையில், பயிற்சி வழி தொடர்பு திட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார் தலைமையில், இணை வேளாண் இயக்குனர் சிவபெருமான், துணை வேளாண் இயக்குனர் குமாரவேல், வேளாண் அலுவலர் பரமநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று பாகூர் பகுதியில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை ஆய்வு செய்தனர்.
பாகூர் உழவர் உதவியக உதவி வேளாண் அலுவலர் முத்துக்குமார் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.