/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழையால் நமுத்தது காங்., தீப்பந்த போராட்டம் போலீசார் நிம்மதி
/
மழையால் நமுத்தது காங்., தீப்பந்த போராட்டம் போலீசார் நிம்மதி
மழையால் நமுத்தது காங்., தீப்பந்த போராட்டம் போலீசார் நிம்மதி
மழையால் நமுத்தது காங்., தீப்பந்த போராட்டம் போலீசார் நிம்மதி
ADDED : செப் 25, 2024 04:53 AM

புதுச்சேரி : மின் கட்டண உயர்வை கண்டித்து தீப்பந்த போராட்டம் நடத்த ஊர்வலமாக வந்த காங்., கட்சியினர் திடீர் மழையால் ஓடியதால் பரபரப்பு நிலவியது.
மின்கட்டண உயர்வை கண்டித்து காங்., கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நேற்று மாலை தீப்பந்த போராட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி மாலை 7:00 மணிக்கு, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உட்பட 50 பேர் மேட்டுப்பாளையம் சிக்னல் அருகே தீப்பந்தம் ஏற்றி ஊர்வலமாக புதுச்சேரி ராஜிவ் சிக்னலுக்கு புறப்பட்டனர். அப்போது பாதுகாப்பு கருதி தீப்பந்தத்தை அணைத்துவிட்டனர்.
இரவு 7:45 மணிக்கு ராஜிவ் சதுக்கம் அருகே வந்ததும் தீப்பந்தம் ஏற்ற தயாராகினர். அப்போது, திடீரென மழை கொட்டியதால், காங்., நிர்வாகிகள் கையில் வைத்திருந்த தீப்பந்தங்களை கீழே போட்டு விட்டு, குடை பிடித்தபடி, காரில் புறப்பட்டு சென்றனர்.
திடீர் மழையால் தீப்பந்த போராட்டம் பிசுபிசுத்ததால், பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.