/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சனீஸ்வரர் கோவிலில் மழைநீர் புகுந்தது
/
சனீஸ்வரர் கோவிலில் மழைநீர் புகுந்தது
ADDED : ஜன 09, 2024 07:34 AM

காரைக்கால் : கனமழை காரணமாக திருநள்ளாறு சனி பகவான் சன்னதியில் மழைநீர் புகுந்தது.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை கொட்டியது. நேற்று காலை 8:30 மணி வரை 14 செ.மீ., மழை பதிவாகியது.
நள்ளிரவு கொட்டிய கனமழையால், திருநள்ளாறு தார்பாரண்யேஸ்வர் கோவிலுக்கு சொந்தமான பெய்யாகுளத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறும் வழியாக மழைநீர் உள்ளே புகுந்தது.
இதனால், கோவிலின் கொடிமரம், நாயன்மார்கள் சன்னதி, சனீஸ்வரர் சன்னதிக்கு அருகில் உள்ள கோபுரவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
நேற்று விடியற்காலை 5:00 மணிக்கு கோவில் நடைதிறந்தபோது, சனீஸ்வரர் கோவில் உள்பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதை கண்டு, கோவில் நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின், 10க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் 10 ராட்சத மோட்டார்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றினர். 6 மணி நேர முயற்சிக்கு பின் தண்ணீர் முழுமையாக வெளியேற்றிய பின், இயல்பு நிலை திரும்பியது. கோவிலுக்குள் மழை நீர் சூழ்ந்தது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.