/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெங்கட்டா நகர் சிறுவர் பூங்காவில் மழைநீர் சேகரிப்பு தொட்டி நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு

ADDED : டிச 15, 2024 06:11 AM

புதுச்சேரி 45 அடி ரோடு வெங்கட்டா நகர் அருகில் 1 லட்சத்து 25 ஆயிரம் சதுரடியில் 10 ஆண்டுகளுக்கு முன் உழவர்கரை நகராட்சி சார்பில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இதில், 55 ஆயிரம் சதுரடியில் பூங்காவில், வாக்கிங் செல்வதற்கான நடைபாதை தளம், திறந்த வெளி உடற்பயிற்சி கூடம், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், சிறிய நுாலகம், கழிப்பிடம், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீர் இந்த பூங்காவில் பெரிய குளம் போல் தேங்கி பூங்காவை பயன்படுத்த முடியாத அளவிற்கு இருந்து வருகிறது. மழை நீரை வெளியேற்ற முடியாத அளவிற்கு அப்பகுதி அமைப்புகள் இருப்பதால், நகராட்சி நிர்வாகத்திற்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில் உழவர்கரை நகராட்சி சார்பில் ரூ. 2.50 லட்சம் செலவில், 40 அடி ஆழம், 6 அடி அகலம் கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டி கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. மேலும் இதேபோன்று இன்னொரு மழை நீர் சேகரிப்பு தொட்டியும் பூங்காவில் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.