/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரயில்வே சுரங்க பாதையில் தேங்கி நிற்கும் மழை நீர்
/
ரயில்வே சுரங்க பாதையில் தேங்கி நிற்கும் மழை நீர்
ADDED : டிச 17, 2024 05:24 AM

புதுச்சேரி: நுாறடிச்சாலையில் ரூ. 5.38 கோடியில் கட்டப்படும் ரயில்வே சுரங்க பாதையில் தேங்கி நிற்கும் கழிவுநீருடன் கலந்த மழைநீரால் கடும் துர்நாற்றம், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது.
புதுச்சேரி இந்திரா சிக்னலில் இருந்து கடலுார் செல்லும் நுாறடிச்சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. மேம்பாலத்தின் கீழ் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடினர். ரயில்வே கேட் சுற்றியுள்ள நகர் மக்கள், ரயில் பாதையை கடப்பதிற்கு வசதியாக, மூடப்பட்ட ரயில்வே கேட் அருகே ரெடிமேட் கான்கிரீட் மூலம் சுரங்கபாதை (சப்வே) அமைக்கப்பட்டது.
சுரங்க பாதைக்கு, வடக்கு மற்றும் தெற்கு இரு பக்கத்திலும் தலா 75 மீட்டர் நீளத்திற்கு சர்வீஸ் சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் அமைக்க எஸ்.ஐ.டி.பி.ஐ., வங்கியில் ரூ. 5.38 கோடி கடன் பெறப்பட்டது.
கடன் தொகை மூலம் கடந்த ஆண்டு மே 10ம் தேதி சர்வீஸ் சாலை பணிகள் துவங்கியது. 10 மாதத்தில் முடிக்க வேண்டிய பணிகள் இதுவரை முடியவில்லை. 17 மாதம் கடந்தும் இதுவரை பணிகள் முடியாததால், கடந்த வாரம் பெஞ்சல் புயலின்போது பெய்த மழை நீர் சுரங்க பாதையில் தேங்கி நிற்கிறது.
மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
சுரங்க பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

