/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
350 கிலோ குட்காவுடன் கார் பறிமுதல்; ராஜஸ்தான் வாலிபர் கைது
/
350 கிலோ குட்காவுடன் கார் பறிமுதல்; ராஜஸ்தான் வாலிபர் கைது
350 கிலோ குட்காவுடன் கார் பறிமுதல்; ராஜஸ்தான் வாலிபர் கைது
350 கிலோ குட்காவுடன் கார் பறிமுதல்; ராஜஸ்தான் வாலிபர் கைது
ADDED : நவ 23, 2024 06:56 AM

கோட்டக்குப்பம் : பெங்களூருவில் இருந்து காரில் 350 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த ராஜஸ்தான் வாலிபரை கோட்டக்குப்பம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் சிறப்பு பிரிவு ஏட்டு ஜெயப்பிரகாஷ், குற்றப்பிரிவு போலீசார் பிரகாஷ், தேவராஜ் ஆகியோர் நேற்று கோட்டக்குப்பம் ரவுண்டான அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை மார்க்கத்தில் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட மாருதி சுசுகி ப்ரீசா கார் சாலையோரம் வெகுநேரமாக நின்றிருந்தது. போலீசார், கார் அருகே சென்றபோது, கார் திடீரென சென்னை நோக்கி வேகமாக புறப்பட்டது.
சந்தேகமடைந்த போலீசார், அந்த காரை சினிமா பாணியில் 2 கி.மீ., துாரத்திற்கு விரட்டிச் சென்று, பெரிய முதலியார்சாவடி அருகே மடக்கினர். அப்போது, காரில் இருந்த ஒருவர் இறங்கி ஓடினார்.
போலீசார் காரை சோதனை செய்தபோது, மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது. உடன், காரில் இருந்த மற்றொரு நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர், ராஜஸ்தான் மாநிலம், ஜோலார் மாவட்டத்தைச் சேர்ந்த தேஜாராம் சைலா மகன் ஆசாராம்,32; என்பதும், பெங்களூருவில் ஒரு கும்பல், குட்கா பொருட்களுடன் காரை ஒப்படைத்ததாகவும், அதனை புதுச்சேரி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அவர்கள் கூறும் இடத்தில் நிறுத்தி பொருட்களை ஒப்படைத்து வந்ததாகவும், மற்றபடி வேறு எதுவும் தெரியாது எனக் கூறினார்.
இதையடுத்து ஆசாராமையும், இவர் கடத்தி வந்த ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள 350 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்து, கோட்டக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, ஆசாராமை கைது செய்தனர். தப்பியோடிய நபரை தேடிவருகின்றனர். குட்கா கடத்தல் ஆசாமியை கைது செய்த தனிப்படை போலீசாரை, டி.எஸ்.பி., சுனில் பாராட்டினார்.