/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை
/
முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை
ADDED : ஆக 21, 2024 04:38 AM

புதுச்சேரி : முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா அரசு சார்பில், கொண்டாடப்பட்டது. தட்டாஞ்சாவடி சிக்னலில் உள்ள ராஜிவ் சிலைக்கு, முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், தலைமை செயலர் சரத்சவுக்கான், போலீஸ் டி.ஜி.பி., ஷாலினி சிங்., அரசு செயலர்கள் ஆசிஷ் மாதோவ்ராவ் மோரே, ஜவகர், கேசவன், சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சர்வமத பிரார்த்தனையுடன், பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டது. முதல்வர் ரங்கசாமி சத்பவனா உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
காங்., சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், காங்., பிரமுகர் வினோத் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.