ராஜிவ்காந்தி பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
ராஜிவ்காந்தி பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
ADDED : செப் 10, 2026 08:44 PM
புதுச்சேரி: கிருமாம்பாக்கம், ராஜிவ்காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
பாலாஜி வித்யாபீத்தின் நிர்வாகத் தலைவர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார்.
சிறு, குறு தொழில்நுட்ப மையத்தின் துணைப் பொது மேலாளர் அமித் நைன் பங்கேற்று, பேசினார்.
பிரெஷ்கைட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் பாலா சண்முகம், சிங்கப்பூரைச் சேர்ந்த சீனியர் கார்ப்பரேட் மேலாளர் சிவக்குமார் சிறப்புரையாற்றினர். கல்லுாரி முதல்வர் விஜயகிருஷ்ணா ராபகா, பள்ளிப் பருவத்திலிருந்து கல்லுாரிப் படிப்பு வரை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகள், திட்டமிட்டு படிக்கும் வழிமுறைகள், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துதல் மற்றும் குறித்து பேசினார். கல்லுாரி துணை முதல்வர் அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்று பேசினர்.
முதலாம் ஆண்டு பொறியியல் ஒருங்கிணைப்பாளர்கள் நாராயணன், ஆரோக்கியராஜ் ஒருங்கிணைத்தனர். ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் ஜெரால்ட் தலைமையில், பேராசிரியர்கள் செய்திருந்தனர். முனைவர் நாராயணன் நன்றி கூறினார்.
