/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கம் முன்னாடி ஜொலிக்குது: பின்னாடி இளிக்குது
/
ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கம் முன்னாடி ஜொலிக்குது: பின்னாடி இளிக்குது
ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கம் முன்னாடி ஜொலிக்குது: பின்னாடி இளிக்குது
ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கம் முன்னாடி ஜொலிக்குது: பின்னாடி இளிக்குது
ADDED : செப் 26, 2024 03:16 AM

புதுச்சேரி : ராஜிவ் உள்விளையாட்டு அரங்கின் முகப்பு சுவரை அழகுப்படுத்திய அதிகாரிகள், சேதமடைந்துள்ள இதர இடங்களை சீரமைக்காமல் விட்டு வைத்திருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச தரத்தில் பயிற்சி பெறவும், விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்காக, கடந்த 1992ம் ஆண்டு உப்பளத்தில் 10 ஏக்கர் பரப்பளவில், இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது.
400 மீட்டர் ஓடுதளம், புல்வெளி மைதானம், வீரர்கள் தங்குமிடம், பார்வையாளர் கேலரி அமைக்கப்பட்டது.
நிர்வாக சீர்கேடு, உரிய பராமரிப்பு இல்லாததால் விளையாட்டு மைதானம் பாழடைந்த வீடு போல மாறிவிட்டது.
தடகள போட்டிக்கான சிந்தட்டிக் ஓடுதளம் அமைக்கும் பணி கடந்த பல மாதங்களாக இழுப்பறியில் நடந்து வருகிறது.
நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், தடை ஓட்டம் போன்ற விளையாட்டுகளுக்கு உபகரணங்கள் அமைக்கவில்லை. மைதானம் முழுதும் புதர்கள் வளர்ந்து காடுபோல மாறிவிட்டது.
பாழடைந்து வரும் இந்த மைதானத்தின் அருகே, ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கம் உள்ளது. இதில், டென்னிஸ், கூடைப்பந்து, கராத்தே, கபடி, பேட்மிட்டன், வாலிபால், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகள் நடந்து வந்தது.
பழுதடைந்த உள்விளையாட்டு அரங்கத்தை ரூ. 60 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி கடந்த சில மாதத்திற்கு முன்பு துவங்கியது. உள்விளையாட்டு அரங்க மரத்தால் ஆன தரைத்தளம், அரங்கின் முகப்பு பகுதி (மேற்கு பக்கம்) மட்டும் வர்ணம் பூசும் பணி நடந்து முடிந்துள்ளது.
மைதானத்தின் மீதமுள்ள வடக்கு, கிழக்கு, தெற்கு பக்க கட்டடத்தின் சுவர்களில் செடிகள் வளர்ந்து, விரிசல்கள் விழுந்துள்ளது. கண்ணாடிகள் உடைந்து சிதிலமடைந்து கிடக்கிறது. குறைந்தபட்சம் வர்ணம் கூட பூசப்படாமல் உள்ளது.