ADDED : ஏப் 07, 2025 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; புதுச்சேரி பிள்ளைச் சாவடி சீரடி சாய்பாபா கோவிலில்ராமநவமி விழாவில்,குழந்தை ராமரை தொட்டியிலிடும் நிகழ்ச்சி நடந்தது.
பிள்ளைச்சாவடி இ.சி.ஆரில் உள்ள கமல சாயி பாபா கோவிலில், ராம நவமி விழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 8:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9:00 மணிக்கு கலைமாமணி பானுமதி வீணை கச்சேரி நடந்தது.
மதியம் 12:00 மணிக்கு ஆரத்தி, மதியம் 2:00 மணிக்கு பரகாலன் பஜனை மண்டலி, மணி கண்ட பாகவதர் வழங்கும் ராம நாம சங்கீர்த்தனம் நடந்தது.மாலை 4:00 மணிக்கு ராமநவமி கொடி ஊர்வலம், தொட்டில் பூஜை நடந்தது. மாலை 6:30 மணிக்கு குழந்தை ராமரை தொட்டியிலிடுதல் நிகழ்ச்சி, 6:45 மணிக்கு சாயி பஜன்ஸ் நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

