/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராமச்சந்திரா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
/
ராமச்சந்திரா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
ADDED : மார் 15, 2024 12:11 AM

வில்லியனுார்: அரியூர் ராமச்சந்திரா வித்யாலயா உயர்நிலைப் பள்ளி 29வது ஆண்டு விழா நடந்தது.
ராமச்சந்திரா வித்யாலயா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்த ஆண்டு விழாவிற்கு பள்ளி கல்வி கழகத் தலைவர் நவநீதசுந்தரம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரநாராயணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் டாக்டர் பர்வீன்சுல்தானா பங்கேற்று வாழ்த்துரை வழங்கி கடந்தாண்டு பள்ளி எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
மேலும் புதுச்சேரி சுயநிதி தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன், சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
விழாவில் பள்ளி நிர்வாக அலுவலர் ராம்பிரசாத் நன்றி கூறினார்.

