UPDATED : மே 15, 2026 09:02 PM
ADDED : மே 15, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில், நாளை முதல் குறைகேட்பு முகாம் நடக்கிறது.
பா.ம.க., தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பா.ம.க., தலைமை அலுவலகத்தில், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை, இன்று 16ம் தேதி முதல், தினமும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேரில் சந்திக்கிறார்.
பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
வாரத்தின் அனைத்து நாட்களும் காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணிவரை குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
