/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பயோமெட்ரிக் வருகைப்பதிவு ராமலிங்கம் எம்.எல்.ஏ., கோரிக்கை
/
பயோமெட்ரிக் வருகைப்பதிவு ராமலிங்கம் எம்.எல்.ஏ., கோரிக்கை
பயோமெட்ரிக் வருகைப்பதிவு ராமலிங்கம் எம்.எல்.ஏ., கோரிக்கை
பயோமெட்ரிக் வருகைப்பதிவு ராமலிங்கம் எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : மார் 22, 2025 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சட்டசபை பூஜ்ய நேரத்தில் ராமலிங்கம் எம்.எல்.ஏ., பேசியதாவது:
புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், செவிலியர் மற்றும் பணி செய்யக்கூடிய ஊழியர்கள் சரியான நேரத்தில் வேலைக்கு வருவதில்லை. அரை மணிநேரத்திற்கு மேல் தாமதமாக வருகின்றனர்.
இதனால் உடல்நிலை பாதிக்கப்படும் மக்கள் விரைந்து சிகிச்சை பெற்று கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இம்மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் கார்டு சிஸ்டத்தை அமல்படுத்த வேண்டும். அப்போது டாக்டர்கள், செவிலியர்கள் சரியான நேரத்திற்கு வந்து சிகிச்சை அளிப்பார்கள்.
எனவே இதனை விரைந்து செயல்படுத்த வேண்டும்.