/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பா.ஜ., தலைவராக ராமலிங்கம் இன்று பதவியேற்பு
/
புதுச்சேரி பா.ஜ., தலைவராக ராமலிங்கம் இன்று பதவியேற்பு
புதுச்சேரி பா.ஜ., தலைவராக ராமலிங்கம் இன்று பதவியேற்பு
புதுச்சேரி பா.ஜ., தலைவராக ராமலிங்கம் இன்று பதவியேற்பு
ADDED : ஜூன் 30, 2025 02:29 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவராக ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். அவர் இன்று மதியம் 12:00 மணிக்கு கட்சியின் தலைவராக பதவி ஏற்கிறார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் பா.ஜ., அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. முதற்கட்டமாக கட்சிக்கு 1.53 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். மாநில தலைவர் பதவிக்கு கடந்த ஜனவரி மாதம் தேர்தல் நடக்கும் என எதிர்பார்த்த நிலையில் திடீரென கிடப்பில் போடப்பட்டது.
கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளதால், மாநில தலைவர் தேர்தலை விரைந்து முடிக்க கட்சி தலைமை உத்தரவிட்டது. அதன்பேரில் புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் பதவிக்கு கடந்த 27ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று காலை மனு தாக்கல் துவங்கியது. காலை 11:24 மணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., ராமலிங்கம் மனு தாக்கல் செய்தார்.
மாநில தலைவர் பதவிக்கு ராமலிங்கம் மட்டுமே மனு தாக்கல் செய்ததால், அவர் போட்டியின்றி தலைவராகிறார்.
இதற்கான அறிவிப்பு, இன்று மதியம் 12:00 மணியளவில் மரப்பாலம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடக்கும் பா.ஜ., விழாவில் முறைப்படி வெளியிடப்படுகிறது.
அதையடுத்து, தலைவர் தேர்தலுக்கான பொறுப்பாளரும், கட்சியின் தேசிய பொதுச்செயலருமான தருண் சுக் முன்னிலையில் ராமலிங்கம் பதவியேற்கிறார்.