ADDED : மே 29, 2026 05:36 AM

அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 17ம் தேதி துவங்கியது.
தொடர்ந்து 2ம் தேதி வரை தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக பர்வதவர்த்தினி ராமலிங்கேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
நேற்று காலை 7:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ராஜவேலு எம்.எல்.ஏ., வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
