/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நடிகர் விஜய்க்கு ரங்கசாமி வாழ்த்து
/
நடிகர் விஜய்க்கு ரங்கசாமி வாழ்த்து
ADDED : ஜூன் 23, 2025 04:38 AM
புதுச்சேரி : த.வெ.க., தலைவர் விஜய்க்கு முதல்வர் ரங்கசாமி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
த.வெ.க., தலைவர் விஜய் நேற்று பிறந்த நாள் கொண்டாடினார். அவரது பிறந்த நாளை கட்சி, தொண்டர்கள், நிர்வாகிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கி, தமிழக மற்றும் புதுச்சேரியில் கொண்டாடினர்.
நடிகர் விஜய்க்கு பா.ஜ., முன்னாள் தலைவர்கள் தமிழிசை, அண்ணாமலை, பா.ம.க., தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன், த.மா.கா., தலைவர் வாசன் உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மொபைல் போனில் த.வெ.க., தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு விஜய் நன்றி தெரிவித்தார்.