/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பீகார் முதல்வராக பொறுப்பேற்ற நிதிஷ்குமாருக்கு ரங்கசாமி வாழ்த்து
/
பீகார் முதல்வராக பொறுப்பேற்ற நிதிஷ்குமாருக்கு ரங்கசாமி வாழ்த்து
பீகார் முதல்வராக பொறுப்பேற்ற நிதிஷ்குமாருக்கு ரங்கசாமி வாழ்த்து
பீகார் முதல்வராக பொறுப்பேற்ற நிதிஷ்குமாருக்கு ரங்கசாமி வாழ்த்து
ADDED : நவ 21, 2025 05:51 AM
புதுச்சேரி: பீகார் முதல்வராக 10வது முறையாக பொறுப்பேற்றுள்ள நிதிஷ்குமாருக்கு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர், விடுத்துள்ள வாழ்த்து செய்தி:
பீகார் முதல்வராக 10வது முறையாக பதவியேற்றதற்கு மனார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த அசாதாரண சாதனை, பீகார் மக்கள் உங்கள் தலைமை, தொலைநோக்கு பார்வை மற்றும் பொது சேவைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றில் தொடர்ந்து வைத்திருக்கும் ஆழ்ந்த நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
புதுச்சேரி மக்கள் மற்றும் புதுச்சேரி அரசின் சார்பாக உங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பீகார் மக்களுக்கு அர்ப்பணிப்பு மற்றும் இரக்கத்துடன் நீங்கள் தொடர்ந்து சேவை செய்யும்போது உங்களுக்கு வலிமை, ஞானம் மற்றும் மீள்தன்மை கிடைக்கட்டும் என, குறிப்பிட்டுள்ளார்.