/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு கொறடா ஆறுமுகம் பிறந்த நாள் முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
/
அரசு கொறடா ஆறுமுகம் பிறந்த நாள் முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
அரசு கொறடா ஆறுமுகம் பிறந்த நாள் முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
அரசு கொறடா ஆறுமுகம் பிறந்த நாள் முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
ADDED : பிப் 08, 2025 06:20 AM

புதுச்சேரி: பிறந்த நாளை கொண்டாடிய, அரசு கொறடா ஆறுமுகத்திற்கு, முதல்வர் ரங்கசாமி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு கொறடா ஆறுமுகம் நேற்று பிறந்த நாளை கொண்டாடினார். அதையொட்டி நேற்று காலை மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜையில் பங்கேற்றார். கட்சியினர் தங்கத்தேர் இழுத்தனர். தொடர்ந்து, தர்மாபுரி ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த அபிேஷகத்தில் தரிசனம் செய்தனர்.
என்.ஆர்., காங்., 15ம் ஆண்டு துவக்க விழாவில், கலந்து கொண்ட ஆறுமுகத்திற்கு, முதல்வர் ரங்கசாமி, பூங்கொத்து கொடுத்து, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், முத்திரையர்பாளையத்தில் உள்ள எம்.எல்.ஏ,. அலுவலகத்தில், முதல்வர் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், எம்.எல்.ஏ., ரமேஷ், இந்திரா நகர் தொகுதி என்.ஆர்., காங்., பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் உட்பட பலர் சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்திரா நகர் தொகுதி, கோவிந்தன்பேட்டை, செந்தில் நகர் பகுதியில் நலத்திட்ட உதவிகளை ஆறுமுகம் வழங்கினார்.