/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய நெருக்கடியில் ரங்கசாமி: மீண்டும் அமைச்சரவையில் மாற்றமா?
/
புதிய நெருக்கடியில் ரங்கசாமி: மீண்டும் அமைச்சரவையில் மாற்றமா?
புதிய நெருக்கடியில் ரங்கசாமி: மீண்டும் அமைச்சரவையில் மாற்றமா?
புதிய நெருக்கடியில் ரங்கசாமி: மீண்டும் அமைச்சரவையில் மாற்றமா?
ADDED : ஜூலை 13, 2025 12:21 AM

கவர்னர்- முதல்வர் மோதல் ஏற்பட்டு சமாதானம் ஆகியுள்ள நிலையில், புதுச்சேரி அமைச்சரவையில் ஆதிதிராவிடர் அமைச்சரை நியமிக்கும் புதிய நெருக்கடி முதல்வர் ரங்கசாமிக்கு ஏற்பட்டுள்ளது.
என்.ஆர்.காங்., - பாஜ., கூட்டணி அமைச்சரவையில் இரண்டு ஆதிதிராவிடர் அமைச்சர்கள் இருந்தனர். இதில் என்.ஆர்.காங்., அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா பல்வேறு பிரச்னைகளால் ஒன்னரை ஆண்டிற்கு முன் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அந்தப் பதவிக்கு காரைக்காலிற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் திருமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கினார். அதைத்தொடர்ந்து கடந்த மாதம் அமைச்சர் சாய் சரவணன் குமாரை பா.ஜ., தலைமை, அமைச்சர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமாக செய்ய வைத்தது. அந்தப் பதவியை ஜான் குமாருக்கு வழங்கியுள்ளது.
இந்நிலையில் என்.ஆர். காங்., - பாஜ., கூட்டணி அமைச்சரைவயில் ஆதிதிராவிடர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளதால், வரும் தேர்தலில் ஆதிதிராவிடர் ஓட்டுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என, தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து பாஜ., முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசித்த முதல்வர் ரங்கசாமிக்கு, கிடைத்த பதில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், ஆதிதிராவிடரான சாய் சரவணகுமாரை நீக்கிய பாஜ., அதற்கு பதிலாக மைனாரிட்டி கிறிஸ்தவரான ஜான் குமாருக்கு அமைச்சர் பதவியை வழங்கி விட்டோம்.
என்.ஆர். காங்., அமைச்சரான ஆதிதிராவிடர் சந்திர பிரியங்காவை நீக்கியதற்கு நீங்கள் தான் ஆதிதிராவிடற்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, பா.ஜ., தரப்பில் இருந்து பதில் கிடைத்துள்ளது.
இதனால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்த முதல்வர் ரங்கசாமி, தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவரும் ஒரு அமைச்சரை நீக்கிவிட்டு ஆதிதிராவிடரான லட்சுமி காந்தனுக்கு அமைச்சர் பதவியை வழங்கலாமா என, யோசித்து வருவதாக என்.ஆர்.காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.