/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி திட்டங்களுக்கு ரூ.5,828 கோடி ஒதுக்க உள்துறை செயலரிடம் ரங்கசாமி கோரிக்கை

ADDED : செப் 24, 2024 08:07 PM

புதுச்சேரி:புதுச்சேரியில் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் முதன்மை திட்டங்கள் பற்றி, மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் நேற்று முன் தினம் காலை தலைமை செயலகத்தில், அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில், தலைமை செயலர் சரத் சவுகான் மற்றும் அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கலந்துரையாடினார்.
முதல்வர் ரங்கசாமி, நீண்ட காலமாக கிடப்பில் உள்ள புதுச்சேரி அரசின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மனு அளித்தார்.
அத்துடன், புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, 3,925, கோடி ரூபாய், புதிய சட்டசபை வளாகம் கட்டுவதற்கு, 420 கோடி, மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த, 500 கோடி, மருத்துவ பல்கலைக் கழகம் கட்ட, 500 கோடி, சட்ட பல்கலைக்கழகம் அமைக்க, 483 கோடி என, மொத்தம் 5,828 கோடி ரூபாய் புதுச்சேரிக்கு மத்திய அரசு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதிலாக, நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இதனை, மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, மீண்டும் ரேஷன் கடைகள் மூலமாக அத்தியாவசிய பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினார்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக, மத்திய உள்துறை செயலர் உறுதியளித்தார்.