sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஏனாமில் வேட்பாளரை அறிவித்து சனி மூலையில் பிரசாரம் துவங்கும் ரங்கசாமி

/

 ஏனாமில் வேட்பாளரை அறிவித்து சனி மூலையில் பிரசாரம் துவங்கும் ரங்கசாமி

 ஏனாமில் வேட்பாளரை அறிவித்து சனி மூலையில் பிரசாரம் துவங்கும் ரங்கசாமி

 ஏனாமில் வேட்பாளரை அறிவித்து சனி மூலையில் பிரசாரம் துவங்கும் ரங்கசாமி


ADDED : மார் 22, 2026 04:46 AM

Google News

ADDED : மார் 22, 2026 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஏனாமில் வேட்பாளரை அறிவித்த முதல்வர் ரங்கசாமி, சனி மூலையில் பிரசாரம் துவங்குகிறார்.

சட்டசபையில் தேர்தலில் புதுச்சேரியில் முதல் கட்சியாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உடன்பாடு ஏற்பட்டு, டில்லிக்கு செல்லாமலே 16 சீட்டு பங்கிட்டை முதல்வர் ரங்கசாமி சாமர்த்தியமாக முடித்தார்.

அதுமட்டுமின்றி, புதுச்சேரி மாநிலத்தின் வடகிழக்கில், உள்ள ஈசான்ய மூலையாக கருதப்படும் ஏனாமில் கடந்த 16ம் தேதி தனது கட்சியின் முதல் வேட்பாளராக மல்லாடி கிருஷ்ணராவை அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி உள்பட அவர் 'கிரீன் சிக்னல்' கொடுத்த 8 வேட்பாளர்கள் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். இன்னும் 7 வேட்பாளர்கள் முதல்வர் சிக்னலுக்காக மனு தாக்கல் செய்யாமல் காத்திருக்கின்றனர். மனு தாக்கலுக்கு இறுதி நாளான நாளை இவர்களும் மனு தாக்கல் செய்வார்கள். அதனை தொடர்ந்து 24ம் தேதி நடக்கும் மனு பரிசீலனை முடிந்து, 26ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவித்ததும், 27ம் தேதி மாலை முதல்வர் ரங்கசாமி போட்டியிடும் தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள சனி மூலையில் இருந்து தனது முதல் தேர்தல் பிரசாரத்தை கூட்டணி கட்சியினருடன் துவங்குகிறார்.

முதல் கட்டமாக தனது கட்சி வேட்பாளர்கள் தொகுதிகளில் பிரசாரம் செய்யும் முதல்வர், அதன் பின்னர் கூட்டணி கட்சியினர் தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். முதல்வரின் பிரசாரத்திற்காக அவரின் ராசி எண்ணாக கருதப்படும் 2349 என்ற எண்ணில் புதிய பொலிரோ ஜீப் வாங்கப்பட்டு, அதனை பிரசார வாகனமாக மாற்றும் பணி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us