தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரங்கசாமிக்கு ரூ.28 கோடி சொத்து தேர்தல் உறுதிமொழி ஆவணத்தில் தகவல்

 ரங்கசாமிக்கு ரூ.28 கோடி சொத்து தேர்தல் உறுதிமொழி ஆவணத்தில் தகவல்

 ரங்கசாமிக்கு ரூ.28 கோடி சொத்து தேர்தல் உறுதிமொழி ஆவணத்தில் தகவல்


ADDED : மார் 21, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி ரூ.28 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளதாக மனு தாக்கல் பிரமான பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

என்.ஆர்.காங்., தலைவரான முதல்வர் ரங்கசாமி வரும் தேர்தலில் போட்டியிட தட்டாஞ்சாவடி மற்றும் மகங்லம் தொகுதிகளில்நேற்று மனு தாக்கல் செய்தார். அதில், அவர் சமர்ப்பித்துள்ள சொத்து விபரங்கள் வருமாறு:

மொத்த சொத்து மதிப்பு: ரங்கசாமியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு 27,99,25,752 ரூபாய். (சுமார் 28 கோடி)

அசையும் சொத்துக்களான 2 கார், 2 பைக், ஒரு தங்க மோதிரம், ஒரு முத்து சங்கிலி ஆகியேவற்றின் மொத்த மதிப்பு ரூ. 21,25,752.

ரொக்கம்: கையிருப்பு ரூ.33,339, எஸ்.பி.ஐ., மற்றும் ஹெச்.டி.எப்.சி வங்கிகள் சேமிப்பு கணக்கில் ரூ.1,47,873.

அசையா சொத்து: தட்டாஞ்சாவடியில் 20 ஆயிரம் சதுர அடி மனை. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.8 கோடி. அதேபகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகள் உள்ளன. அதன் சந்தை மதிப்பு 19.78 கோடி. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.27.28 கோடி ஆகும்.

கடன் விவரங்கள்: வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் ஏதும் இல்லை. இருப்பினும், தனி நடபர்களிடம் பெற்ற கடன் ரூ.35 லட்சம் நிலுவையில் உள்ளது.

வருமானம்: 2024--25 நிதியாண்டில் இவரது ஆண்டு வருமானம் ரூ.1,93,110.

சமூகப் பணி: பி.காம்., மற்றும் பி.எல்., பட்டங்களைப் பெற்றுள்ளார். ஸ்ரீ சத்குரு அப்பா பைத்தியம் சுவாமி அன்னதான அறக்கட்டளை என்ற பொதுத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனராகவும், அறங்காவலராகவும் உள்ளார். அவர் மீது குற்றவியல் வழக்குகள் எதுவும் நிலுவை இல்லை என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us