தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் வாக்குவாதம் 

விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் வாக்குவாதம் 

விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் வாக்குவாதம் 


ADDED : ஜன 10, 2024 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2024 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள தமிழக விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிக்கு வந்தவர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரியில் உள்ள தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் நேர கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் நேற்று பணிக்கு வந்தார்.

அப்போது, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அவரிடம் பணிக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து, கலைந்து போக செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us