/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரிய வகை புலாசா மீன் ரூ.22 ஆயிரத்திற்கு ஏலம்
/
அரிய வகை புலாசா மீன் ரூ.22 ஆயிரத்திற்கு ஏலம்
ADDED : ஜூலை 21, 2025 06:42 AM
புதுச்சேரி : ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏனாம் வழியாக கடலில் கலக்கும் கோதாவரி ஆற்றில் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்ப தால், தற்போது மீனவர்கள், மீன் பிடிப்பில் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர் ராஜிவ் என்பவர் வீசிய வலையில் அரிய வகை புலாசா மீன் கிடைத்தது. மீன்களின் ராஜா என அழைக்கப்படும், இந்த அரிய வகை புலாசா மீன், பருவமழை காலங்களில் இன பெருக்கம் செய்ய கடலில் இருந்து ஆற்றிற்கு இடம் பெயர்வது வழக்கம். அதிக சுவை மற்றும் புரதசத்து மிக்க இந்த மீனை ஏலம் எடுப்பதில் போட்டி ஏற்பட்டது.
1.8 கிலோ எடை கொண்ட இந்த மீனை பொன்ன மண்ட ரத்தினம் என்பவர் ரூ.22 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். இந்த ஆண்டு பிடிப்பட்ட புலாசா மீன்களில், இந்த மீன் தான் அதிகபட்ச விலைக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.