/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கடை ஊழியர் சம்பளம் ரூ.12 ஆயிரமாக உயர்வு
/
ரேஷன் கடை ஊழியர் சம்பளம் ரூ.12 ஆயிரமாக உயர்வு
ADDED : ஆக 06, 2025 08:07 AM

புதுச்சேரி : ரேஷன் கடை ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளத்திற்கான காசோலையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கி வந்தது. கடந்த காங்., ஆட்சியில் தரமற்ற அரிசி வழங்குவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, அரிசிக்கு பதிலாக ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டது.
இதன் காரணமாக மாநிலத்தில் ரேஷன் கடைகள் மூடப்பட்டன. இதனால், ரேஷன்கடை ஊழியர்கள் 55 மாதங்களாக வேலையில்லாமல் இருந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
அதனையொட்டி, ரேஷன் கடை ஊழியர்கள், தங்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தி வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதனையேற்ற முதல்வர் ரங்கசாமி, ரேஷன் கடை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.4,500யை, ரூ.12 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நேற்று மாலை கான்பெட் சார்பில் நடந்த விழாவில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளத்திற்கான காசோலையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.