/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சரியான திட்டமிடலுடன் இலவச அரிசி திட்டம் ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

ADDED : அக் 07, 2024 06:09 AM
புதுச்சேரி: ஊழியர்களுக்கான சரியான திட்டமிடலுடன் இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி பாரதிய நியாய விலை கடை ஊழியர்கள் நலச் சங்க செயலாளர் பிரேம் ஆனந்த் அறிக்கை:
முதல்வர் ரங்கசாமி ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதாக அறிவித்தது வரவேற்கத்தக்கது.
அவர், அறிவித்துள்ள 10 கிலோ அரிசி ரேஷன் கடைகளில் போடுவதன் மூலம் கையாளுதல் கட்டணம் 20 லட்சம் மட்டுமே கிடைக்கும்.
இது சம்பளம் வழங்க போதுமனதாக இருக்காது. பெரும்பான்மை ஊழியர்கள் கொண்ட கூட்டுறவு சங்கத்தின் ரேஷன் கடை ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்திற்கான தொகை 60 லட்சம் ரூபாய் தேவைப் படுகிறது.
சரியான திட்டமிடுதல் இல்லாமல் இருந்தால் ரேஷன் கடை ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.
இதனைப் போக்க சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசி, அந்தோதியா திட்ட ரேஷன் கார்டுகளுக்கு 35 கிலோ அரிசி, மஞ்சள் ரேஷன்கார்டுகளுக்கு 10 கிலோ அரிசி தொடர்ந்து வழங்கினால் மட்டுமே ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாத சம்பளம் வழங்க முடியும். இது குறித்து முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.